UPDATED : ஜன 06, 2024 12:00 AM
ADDED : ஜன 06, 2024 10:39 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கட்டட பொருட்கள் கண்காட்சியை எஸ்.பி.,பிரதீப் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.சுந்தர்ராஜன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் தாமோதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் டி .டி.சி.பி. கமிட்டி தலைவர் பழனிவேல், பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர்கள் ஜனகர் குழந்தை ராஜ் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர்.கமிட்டி சேர்மன் மணிவண்ணன், மேற்கு ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சண்முகம், கண்காட்சி கமிட்டி இணை இணைத் தலைவர்கள் முகமது அப்துல் காதர்,வீரமார்பன் , கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான திண்டுக்கல் மேற்கு ரோடு சங்க தலைவர் ஆரோக்கிய செல்வராஜ்பேசினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 80 நிறுவனங்கள் இடம்பெற்றது. இன்றும், நாளையும் காலை 9:00 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை நடக்கிறது.கலந்து கொள்பவர்களுக்கு தினமும் குழுக்கள் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத் தலைவர் தர்மலிங்கம், செயலாளர் பவுல் ராஜ், பொருளாளர் மாரியப்பன் பங்கேற்றனர்.