Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாமல்லை நாட்டிய விழாவில் வெளிநாட்டு பயணியர் நடனம்

மாமல்லை நாட்டிய விழாவில் வெளிநாட்டு பயணியர் நடனம்

மாமல்லை நாட்டிய விழாவில் வெளிநாட்டு பயணியர் நடனம்

மாமல்லை நாட்டிய விழாவில் வெளிநாட்டு பயணியர் நடனம்

UPDATED : ஜன 04, 2024 12:00 AMADDED : ஜன 04, 2024 09:57 AM


Google News
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், கடந்த டிச., 22ம் தேதி முதல், இந்திய நாட்டிய விழா நடக்கிறது. தமிழக சுற்றுலாத் துறை, மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழா, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.தினமும் மாலை, பரதம், குச்சிப்புடி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியங்கள், கரகம் உள்ளிட்ட கிராமியக் கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சர்வதேச பயணியர், கிராமியக் கலைகளை ரசித்து மகிழ்கின்றனர். குறிப்பாக, கலைஞர்கள், வாத்திய இசையுடன் பாடி, நடனமாடும் கரகம் உள்ளிட்ட கிராமிய கலைகளை ரசித்து உற்சாகமடைகின்றனர்.நேற்று முன்தினம், கிராமிய நடனத்தால் கவரப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள், உற்சாகமாக மேடையேறி, கலைஞர்களுடன் கைகோர்த்து நடனமாடினர். இந்நடனத்தை, சுற்றுலா பயணியர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us