Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேர்களை தேடி திட்ட சுற்றுலா கோவில்பட்டியில் வெளிநாட்டினர்

வேர்களை தேடி திட்ட சுற்றுலா கோவில்பட்டியில் வெளிநாட்டினர்

வேர்களை தேடி திட்ட சுற்றுலா கோவில்பட்டியில் வெளிநாட்டினர்

வேர்களை தேடி திட்ட சுற்றுலா கோவில்பட்டியில் வெளிநாட்டினர்

UPDATED : ஜன 04, 2024 12:00 AMADDED : ஜன 04, 2024 09:59 AM


Google News
கோவில்பட்டி:
பூர்வீகத்தின் வேர்களை தேடி சுற்றுலா வந்த, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, பிஜூ ஆகிய நாடுகளிலிருந்து 57 இளைஞர், இளம்பெண்கள் தமிழர்களின் வரலாற்று இடங்களைக் கண்டு ரசித்தனர்.வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்களின் பூர்வீக இடமான தமிழகத்திற்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வேர்களை தேடி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுஆண்டுதோறும் 200 இளைஞர், இளம்பெண்களை அழைத்து வரவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், முதல் முறையாக இலங்கை, 26, ஆஸ்திரேலியா,- 14, கனடா, 8, பிஜூ,- 9 என, 57 இளைஞர், இளம் பெண்கள், 15 நாள் சுற்றுலாவாக கடந்த 27ம் தேதி தமிழகம் வந்தனர்.அவர்கள் துணை கலெக்டர் செண்பகவள்ளி வழிநடத்தி தமிழகம் முழுதும் அழைத்துச் சென்றார். சொகுசு பஸ்களில் அவர்கள் முக்கிய இடங்களை கண்டு ரசித்தனர். வரலாறுகளை கேட்டு அதிசயத்தனர். இந்நிலையில், அவர்கள் துாத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தனர்.சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தை பார்த்துவிட்டு, கோவில்பட்டி கரிசல் இலக்கிய தந்தை கி.ரா மண்டபம் வந்தனர்.கலந்துரையாடல்
கி.ரா.,வின் உருவசிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், கி.ரா., அரங்கில் கரிசல் பூமி குறித்து அவர்களுடன் சோ.தர்மன் கலந்துரையாடினார். அப்போது, சோ.தர்மன் பேசுகையில் கட்டடங்கள், சிற்பங்கள் எல்லாம் மாறிவிடும். ஆனால், இலக்கியத்தை தவிர வேறு எதனாலும் அறிய முடியாது. சங்க கால இலக்கியத்தில் தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளம், விருந்தோம்பல். தமிழனின் விருந்தோம்பல் குறித்து 3ம் மற்றும் 4ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குறுந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us