10 நாளில் முடிக்கலாம்: எம்.பி.ஏ., போலி அறிவிப்பு பற்றி எச்சரிக்கை

UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 11:00 AM
கோவை:
எம்.பி.ஏ., படிப்புகளை, 10 நாட்களில் முடிக்கலாம் என்ற போலி அறிவிப்புகளில் மாணவர்கள் ஏமாற வேண்டாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) எச்சரித்துள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் இன்றி எந்த ஒரு கல்லுாரி, பல்கலைகளும் எம்.பி.ஏ., படிப்பை நடத்த இயலாது. எம்.பி.ஏ., இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு, தொழில் மற்றும் மேலாண்மை சார்ந்த பல்வேறு பிரிவுகளில், வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சில தன்னம்பிக்கை பேச்சாளர்கள், இன்புளூயன்சர்ஸ்10 நாளில் எம்.பி.ஏ., படிக்கலாம் என வகுப்புகள் நடத்துவதாக, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகையை படிப்புகள் செல்லாது என்றும், மாணவர்கள் இதில் சேரவேண்டாம் எனவும் ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு மாணவர்கள், https://aicte-india.org/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.