பள்ளி மேலாண்மை கூட்டம் வரும் 5ம் தேதி நடத்த உத்தரவு

UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:51 AM
கோவை:
பள்ளி மேலாண்மை குழு கூட்டம், வரும் 5ம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றுவதோடு, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர், ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்ட, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளி வளர்ச்சி பணிகள், தேவை, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.இதோடு, ஒருங்கிணைந்த கல்வி சார்பில், கூட்டத்தில் கலந்துரையாட வேண்டிய தலைப்புகள் முன்கூட்டியே அளிக்கப்படுகின்றன. இதனடிப்படையில், வரும் 5ம் தேதி, பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், பொதுத்தேர்வு தயாரிப்புகள், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், சிறப்பு குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தல், பள்ளி வளாக துாய்மைப்பணிகள் குறித்து, உறுப்பினர்களின் கருத்துகளை பெற்று, தீர்மானம் நிறைவேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.