Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்

உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்

உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்

உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்

UPDATED : ஜூன் 12, 2024 12:00 AMADDED : ஜூன் 12, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
சென்னை:
உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது என நிடி ஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் தெரிவித்தார்.

சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின், 60வது நிறுவன தினம் மற்றும் வைர விழாவின் துவக்க நிகழ்ச்சி, சென்னை தரமணியில் நேற்று நடந்தது.

இதில், எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் ஆனந்தவள்ளி பேசியதாவது:

நாட்டின் உள்கட்டமைப்பை வடிவமைப்பதில், எஸ்.இ.ஆர்.சி., முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், கட்டமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு, பேரழிவு குறைப்பு, நிலையான கட்டமைப்புகளுக்கு மேம்பட்ட பொருட்கள், சிறப்பு மற்றும் பல்வேறு செயல் திறன் உடைய கட்டமைப்பு, மின்சார கட்டமைப்பு, கடலோர கட்டமைப்பு ஆகிய முக்கிய துறைகளில் மையமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

நிடி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் பேசியதாவது:

நாட்டின் உள்கட்டமைப்பு பொறியியல் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறியீடு. எனவே, உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், பேரழிவுகளுக்கு எதிரான பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

கட்டமைப்பு பொறியாளர்கள் பகுப்பாய்வு, வடிவமைப்பு, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பன்முக பொறுப்புகளை கொண்டுள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை மையமாக கொண்டு, சவால்களை எதிர்கொள்வதற்கான திறன்களை மேம்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய காற்றாலை மின்சார நிறுவன முன்னாள் தலைமை இயக்குனர் கோமதிநாயகம் பேசும்போது, எதிர்கால எரிசக்தி துறையில், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், சேமிப்பு தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் கிரிட் போன்றவை அவசியம் என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us