மொழியின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம்

UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 10:58 AM
மதுரை :
மொழியின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் உதவுவதாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி டிச. 15 முதல் 21 வரை நடக்கிறது.
நேற்றுமுன்தினம் (டிச. 16) நடந்த நிகழ்வில், பேராசிரியர் துரை மணிகண்டன் பேசுகையில், தகவல் தொழில்நுட்பம் மொழிக்கு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழில் மட்டுமே இணையத்திற்கென தனி பல்கலை உள்ளது. புலம்பெயர் தமிழர்களால் தான் இணையத்தமிழ் வளர்ந்தது. பேராசிரியர் தெய்வசுந்தரம் அம்மா மென்தமிழ், அண்ணா பல்கலை பேராசிரியர் பொன்மொழி பொன்விழி, பேராசிரியர் வினோத்ராஜன் யாப்பு உணரி ஆகிய மென்பொருள்களை உருவாக்கினர் என்றார்.
கார்த்திகைச் செல்வன் பேசுகையில், நம்மை நிராகரிக்கும், அவமதிக்கும் சமூகத்தில் தன்மானத்துடன் வாழ கல்வி அடிப்படையானது. சமூகம் நமக்கு கொடுத்ததை விட அதிகமாக நாம் கொடுக்க வேண்டும். அதுவே அறம் சார்ந்த வாழ்க்கை. அதற்கு கல்வி உதவும் என்றார்.
இயக்குநர் சந்தானம், வழக்கறிஞர் பால சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசிலா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சத்தியப்பிரியா பயற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். மாநில அளவில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.