வரிப்பணத்தை பதுக்குவதை கண்டறியும் மத்திய பட்ஜெட் கருத்தரங்கில் தகவல்

UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:33 AM

மதுரை:
மத்திய பட்ஜெட்டின் நோக்கம் வரிப்பணத்தை பதுக்கி, மக்கள் ஏமாற்றுகிறார்களா இல்லையா என அறிவதற்குத்தான் என, மதுரையில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசினர்.
மதுரையில் தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது. தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.இணை செயலாளர் கணேசன், பொருளாளர் சுந்தரலிங்கம் பங்கேற்றனர். பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ராஜராஜேஸ்வரன் கூறியதாவது:
பட்ஜெட்டை எந்தளவு படிக்கிறோமோ அதேபோல பொருளாதாரத்தையும் ஆய்வு செய்வது அவசியம். ஏனென்றால் பொருளாதார ஆய்வுகளில் எவ்வித அரசியல் நோக்கமும் இருக்காது. ஆனால் பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புண்டு.
பட்ஜெட்டில் பீஹார், ஆந்திர மாநிலங்கள் பற்றி விமர்சனங்கள் அதிகளவில் வந்தன. அவை தவிர்க்க முடியாத காரணங்களால் வந்திருக்க கூடும். பட்ஜெட்டை 2 வகைகளில் நேடியாகவும், மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இம்முறை பட்ஜெட்டில் அதிகப்படியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
வருமான வரி தொடர்பாக நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. பரிவர்த்தனைகளை கூடுதலாக கவனித்து சரிபார்க்க இம்முறை பட்ஜெட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பழைய, புதிய வரிமுறைகள் என 2 வகைகளாக பிரிக்கப்படுகிறது.
பழைய வரிமுறையில் எவ்வித திருத்தங்களும் இருக்காது. ஆனால் வரியின் மதிப்பு அதிகம். புதிய வரிமுறையில் திருத்தங்கள் இல்லை என்றாலும் வரியின் மதிப்பு குறைவு. இந்த இரண்டையும் ஒப்பிடுகையில் மக்கள் பழைய வரிமுறையையே தங்களுக்கு பயனுள்ளதாக கருதுகின்றனர். இந்த பட்ஜெட்டின் நோக்கம் வரிப்பணத்தை பதுக்கி, மக்கள் ஏமாற்றுகிறார்களா இல்லையா என அறிவதற்குத்தான், என்றார். நிர்வாகிகள் செல்வம், ரமேஷ், ஜீயர்பாபு உடன் இருந்தனர். செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.