கலைத் திருவிழாவில் ஓரங்கட்டப்பட்ட ஓவியம்

UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:35 AM
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழாவில், ஓவிய போட்டிகளின் பிரிவு குறைக்கப்பட்டுள்ளது என ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சுந்தரமூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பிய மனு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழா, 2024ம் ஆண்டுக்கான போட்டி, வரும், இன்று முதல் நடைபெறுகிறது. இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணபித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களும் கலைத்திருவிழாவில், ஏதேனும் ஒரு போட்டியிலாவது பங்கேற்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிக்காட்ட தயாராகி வருகின்றனர். கடந்தாண்டு வரை, ஓவியப்பிரிவில், 11 போட்டிகள் நடத்தப்பட்டு, 33 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நடப்பாண்டு ஓவிய பிரிவில், 4 பிரிவுகளில் மட்டுமே போட்டி நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், வெற்றியாளர்களின் எண்ணிக்கை, 12 ஆக குறையும். இது, ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓவியப்பயிற்சி பெற்று, போட்டியில் பங்கேற்க தயாராக உள்ள மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, போட்டிகளை குறைக்காமல், கூடுதலாக பிரிவுகளை உருவாக்கி போட்டி நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.