UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 12:04 PM

நாட்டின் உயரிய இன்ஜினியரிங் பதவுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, ஐ.இ.எஸ்., எனும் இந்தியன் இன்ஜினியரிங் சர்வீசஸ்.
யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இத்தேர்வு வாயிலாக, ரயில்வே, தொலைத்தொடர்பு, நீர் வளங்கள், இந்திய ராணுவம், மின், இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள், இந்திய கடற்படை போன்ற பல்வேறு துறைகளில் ஐ.இ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தது 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் அவசியம். எனினும், அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
தேர்வு முறை:
சிவில் சர்வீசஸ் தேர்வு போலவே, இத்தேர்வும் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
முதல்நிலைத் தேர்வு
தாள்-1:
மொத்தம் 100 கேள்விகளைக் கொண்ட இரண்டு மணி நேரத் பொதுத் திறன் தேர்வு. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தாள்-2:
தேர்வு செய்யப்பட்ட பொறியியல் பிரிவுகளில் இருந்து 150 கேள்விகள் இடெம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான இத்தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது.
முதன்மைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டு தாள்களைக் கொண்ட முதன்மைத் தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். பிரதான இன்ஜினியரிங் பிரிவுகளில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான 6 மணிநேரத் தேர்வாக நடத்தப்படுகிறது.
நேர்முகத் தேர்வு
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது 200 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது.
எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பணி பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது, ஐ.இ.எஸ்., முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.upsconline.nic.in/ எனும் யு.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
நவம்பர் 22
விபரங்களுக்கு:
www.upsc.gov.in