மும்மொழி கொள்கை பெயரில் ஹிந்தி திணிப்பு : அமைச்சர் சாமிநாதன் கொதிப்பு

UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 10:37 AM

காங்கேயம்:
மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் காங்கேயத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாமிநாதன் தலைமை வகித்தார். காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
ஹிந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும். வாழ்வாதாரம் அமையும் என்பதை ஏற்க இயலாது. ஏனென்றால் ஹிந்தி படித்தவர்களே தமிழகத்தை நாடி தினமும் குடிபெயர்ந்து வருகின்றனர். நமது தாய்மொழியான தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டிய நிலையிலும், தொடர்ந்து பரப்ப வேண்டிய நிலையிலும்
உள்ளோம். பெரும்பாலான நாடுகளில் தமிழ் மொழி முக்கிய மொழியாக உள்ளது. மும்மொழி கொள்கையில் ஹிந்தி என்ற ஒரு மொழியை திணிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
மறுசீரமைப்பு என்ற கூட்டத்தை நடத்தி தொகுதிகளை குறைக்கும் செயலும் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. இதனால்தான் நாம் அனைவரும் எப்போதும் மத்திய அரசை எதிர்க்கிறோம். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அதற்கான நிதியை ஒதுக்குவோம் என்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை பொது குழு உறுப்பினர் கார்த்திகேயன். ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், செந்தில்குமார், சந்திரசேகரன், பிரபு, நகர செயலாளர் முருகானந்தன், காங்கேயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கழக மற்றும் அணி சார்ந்த நிர்வாகிகள் என, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.