ஐ.ஐ.டி., அட்மிஷன் ராஜஸ்தான் டாப்; விண்ணப்பிப்பதில் கூட பின்தங்கும் தமிழகம்

UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:59 AM

கோவை:
ஐ.ஐ.டி., கல்லுாரிகளில் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுகளை எதிர்கொண்டு, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழகம், நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் கூட பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில், 23 ஐ.ஐ.டி., கல்விநிறுவனங்கள் உள்ளன. இங்கு, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே படிக்க இயலும். இந்நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜன., மற்றும் ஏப்., மாதங்களில் நடத்தப்பட்டு, மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை எடுத்து, ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டில், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வை பொறுத்த வரையில், தமிழகத்தில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவாக உள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடும் போது, தமிழகம் மிகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:
கடந்த, 2023ல் 17,340 மாணவர்களும், 2022ல் 16,614 மாணவர்களும் ஐ.ஐ.டி., கல்விநிறுவனங்களில் சேர்க்கை புரிந்துள்ளனர். இதில், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, உத்திரபிரதேஷ் ஆகிய ஐந்து மாநிலங்களை சேர்ந்த 60 சதவீத மாணவர்கள் சேர்க்கை புரிந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், 2022ல் 436 பேரும், 2023 ல் 545 மாணவர்கள் சேர்க்கை புரிந்துள்ளனர். முந்தைய ஆண்டைக் காட்டிலும், 2023ல் 100 பேர் கூடுதலாக சேர்ந்து இருந்தாலும் ஒட்டுமொத்த சேர்க்கையில் மிகவும் பின்தங்கி, 13ம் இடத்தில் உள்ளது. தமிழக மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிப்பதே இல்லை என்பதே மிகவும் வேதனையாகவுள்ளது. 2023 ல் ராஜஸ்தான் மாநிலத்தில் 24,034 மாணவர்கள் விண்ணப்பித்து 23,355 பேர் நுழைவுத்தேர்வை எழுதியுள்ளனர்; 6,229 பேர் தகுதி பெற்றுள்ளனர். உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராட்டிராவில் அதிகளவில் நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர்.
ஆனால்,தமிழகத்தில் 2023ல் 7,433 பேர் மட்டுமே விண்ணப்பித்து 6,535 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். அதில், 1,269 பேர் தகுதிபெற்று; 545 பேருக்கு சீட் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை ஒப்பிடுகையில், 3 மடங்கு நாம் பின்தங்கி இருக்கின்றோம்.
தமிழகத்தில், இயற்பியல், வேதியியல், கணிதம் படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். வெற்றி, தோல்வியை பற்றி கவலைபடாமல் விண்ணப்பிக்கவேண்டும். நடப்பாண்டு விண்ணப்பிக்கும் வாய்ப்பு முடிந்துவிட்டதால், அடுத்தாண்டு அரசு அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.