Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை 11:00 மணிக்குள் தடுப்பூசி போடுங்கள்

காலை 11:00 மணிக்குள் தடுப்பூசி போடுங்கள்

காலை 11:00 மணிக்குள் தடுப்பூசி போடுங்கள்

காலை 11:00 மணிக்குள் தடுப்பூசி போடுங்கள்

UPDATED : ஏப் 17, 2024 12:00 AMADDED : ஏப் 17, 2024 10:02 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலைகளை எதிர்கொள்வது தொடர்பாக, தலைமை செயலருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், சுகாதாரத்துறை தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதன கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறையின் சுவர்களை ஒட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைக்க வேண்டும். அப்போது தான், சுவர்கள் வாயிலாக கடத்தப்படும் வெப்பத்திலிருந்து மருந்துகளை பாதுகாக்க இயலும்.

அதேபோல, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை, வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே துவங்கி காலை 11:00 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். அதன் வாயிலாக, வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us