Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

விடுமுறை தராவிட்டால் நடவடிக்கை பாயும்!

UPDATED : ஏப் 17, 2024 12:00 AMADDED : ஏப் 17, 2024 10:09 AM


Google News
ஓட்டுப்பதிவு நடக்கும் வரும் 19ம் தேதி, அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் என, அனைத்துக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ள எண்களில் புகார் செய்யலாம்; 1950 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப, 1 லட்சத்து, 59,100 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; 88,783 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவை வரும், நாளை மறுதினம் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us