Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழுப்புரத்தில் 28ம் தேதி தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு

விழுப்புரத்தில் 28ம் தேதி தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு

விழுப்புரத்தில் 28ம் தேதி தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு

விழுப்புரத்தில் 28ம் தேதி தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு

UPDATED : ஏப் 23, 2024 12:00 AMADDED : ஏப் 23, 2024 05:52 PM


Google News
விழுப்புரம்:
தினமலர் நாளிதழ், டைம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு, வரும் 28ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, மே 5ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுத தயாராகி உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ் டைம் நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரி தேர்வு வரும் 28ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.20 மணி வரை, விழுப்புரம் செஞ்சி ரோடு ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த மாதிரி நுழைவு தேர்வில் பதிவு செய்துள்ள விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us