கர்நாடகா கல்லூரி மாணவி கொலை: வழக்கு சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 05:53 PM
பெங்களூரு:
கர்நாடகாவில் கல்லுாரி மாணவி நேஹா கொலை வழக்கை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது..
கர்நாடகாவில் ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்., கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா, 22; ஹூப்பள்ளியில் தனியார் கல்லுாரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 18ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து கல்லுாரி வளாகத்தில் நடந்து சென்றார்.
நேஹாவை வழிமறித்த பயாஸ், 19, என்ற மாணவர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலையை கண்டித்து, பா.ஜ., ஹிந்து அமைப்புகள், ஏ.பி.வி.பி., மாணவ அமைப்பினர் காதலித்து மதம் மாற்றும் லவ் ஜிகாத்துக்கு உடன்படாததால், இந்த கொலை நடந்ததாக பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமயைா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரத்தில் வழக்கை ஹூப்பள்ளி மாவட்ட போலீசாரிடமிருந்து சி.ஐ.டி., போலீசாரிடம் வழக்கை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.