Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புற்றுநோய் விழிப்புணர்வுக்கு டிஜிட்டல் பிளிப் புத்தகம்

புற்றுநோய் விழிப்புணர்வுக்கு டிஜிட்டல் பிளிப் புத்தகம்

புற்றுநோய் விழிப்புணர்வுக்கு டிஜிட்டல் பிளிப் புத்தகம்

புற்றுநோய் விழிப்புணர்வுக்கு டிஜிட்டல் பிளிப் புத்தகம்

UPDATED : பிப் 05, 2025 12:00 AMADDED : பிப் 05, 2025 08:51 AM


Google News
கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு அடங்கிய, டிஜிட்டல் பிளிப் புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. எஸ்.பி., கார்த்திகேயன் புத்தகத்தை வெளியிட்டார்.

புற்றுநோய் மைய இயக்குனர் குகன் கூறுகையில், 2020ல் 12 லட்சமாக இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2025ல் 15.2 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5-10 லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதே காரணம். ஆய்வுகளின் படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு, வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றார்.

நேற்றைய நிகழ்வில், பிப்., மாதம் முழுவதும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுமக்கள், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை அனைத்து வேலைநாட்களிலும் பங்கேற்கலாம்.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். விழிப்புணர்வு டிஜிட்டல் பிளிப் புத்தகத்தை இலவசமாக மக்கள்,https://mhits.in/SRIOR/WCD_2025/index.html வலைதளத்தில் படிக்கலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us