தேசிய அறிவியல் கண்காட்சியில் அமிர்தா வித்யாலயம் முதலிடம்

UPDATED : பிப் 05, 2025 12:00 AM
ADDED : பிப் 05, 2025 08:53 AM
கோவை:
சி.பி.எஸ்.இ., தேசிய அறிவியல் கண்காட்சியானது, ஹரியானாவின் குர்கானிலுள்ள அமிட்டி சர்வதேசப் பள்ளியில் நடந்தது. இதில், நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயம் மாணவர்கள், தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 429 பள்ளிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இளம் மாணவர்களின் புதுமையான அறிவியல் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயம் பிளஸ் 1 மாணவர்கள் பிரகதீஷ் மற்றும் வேதவ் ஆகியோர், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு' என்ற கருப்பொருளின் கீழ், தங்கள் திட்டமான ரோட்ஸ்கி யைச் சமர்ப்பித்தனர். இந்தத் திட்டம், தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றது.
நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயத்தின் முதல்வர் கூறுகையில், இந்த வெற்றி, அமிர்தா வித்யாலயத்தின் தரமான கல்வியை பிரதிபலிக்கிறது என்றார்.