அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்க முடிவு

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 10:01 AM

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில், தமிழக முதல்வர் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 665 அரசு பள்ளிகளில், 46,473 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டது. அதன்பின், மாவட்டத்தில், 61 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,933 மாணவ - மாணவியருக்கு, காலை உணவு வழங்க முடிவானது.
இதற்கான ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் செயல்படுத்தவது தொடர்பாக ஆலோசனை செய்ப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.