Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.யு.இ.டி., - பி.ஜி.,

சி.யு.இ.டி., - பி.ஜி.,

சி.யு.இ.டி., - பி.ஜி.,

சி.யு.இ.டி., - பி.ஜி.,

UPDATED : ஜன 18, 2025 12:00 AMADDED : ஜன 18, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, தேசிய தேர்வு முகமை நடத்தும் சி.யு.இ.டி., எனும் 'சென்ட்ரல் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்' எழுத வேண்டியது அவசியம்.

இளநிலை பட்டப்படிப்புகளில் சேர சி.யு.இ.டி., - யு.ஜி., தேர்வும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்வும் தனித்தனியே நடத்தப்படுகிறது. 2025-26ம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி நிறுவனங்கள்: அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், இதர பங்குபெறும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்.

கல்வித் தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 157 பாடப்பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒருவர் அதிகபட்சம் 4 தேர்வு தாள்களுக்கு விண்ணப்பிக்கலாம். 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் 75 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் தலா 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படுகிறது.

தேர்வு மையங்கள்:
நாடு முழுவதிலும் உள்ள 285 முக்கிய நகரங்களிலும், 27 வெளிநாடுகளிலும் 2025ம் ஆண்டிற்கான சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கான நகரங்களை தேர்வு செய்வதில் இருப்பிடத்தை பொறுத்து, ஒரு மாணவர் அதிகபட்சம் 4 விருப்பங்களை பதிவு செய்யலாம். எனினும், தேர்வு மையத்தை நிர்ணயிப்பதில் தேசிய தேர்வு முகமையே இறுதி முடிவை எடுக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:
https://cuetpg.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 1

தேர்வு நடைபெறும் நாள்:
மார்ச் 13 முதல் 31 வரை

விபரங்களுக்கு:
https://exams.nta.ac.in/CUET-PG#





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us