சி.பி.எஸ்., திட்ட ஆசிரியர்களுக்கு நெருக்கடி: கல்வித்துறைக்கு கண்டனம்

UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:29 AM
மதுரை:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.,) உள்ள ஆசிரியர்களிடம் பணிநீட்டிப்பு முடிவதற்குள் சி.பி.எஸ்., தொகை பெற விண்ணப்பிக்க கல்வித்துறை கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, என தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மதுரையில் இந்த மீட்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிநீட்டிப்பு பெற்ற ஆசிரியர்களிடம் சி.பி.எஸ்., தொகை பெற விண்ணப்பிக்க கல்வித்துறை கட்டாயப்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டம் அடிப்படையில் பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய உரிமைகள் வழங்கக் கோரி 15 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதில் சென்னை உயர்நீதிமன்றம் 2 நீதிபதி அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதில், சி.பி.எஸ்., தொகை கோரி விண்ணப்பிக்கும் போது தற்போது அரசால் பெறப்படும் அண்டர் டேக்கிங் ஆசிரியர்களை கட்டுப்படுத்தாது. வழக்கு தொடுத்தவர்கள் பழைய பென்ஷன் வழக்கில் வெற்றிபெறும்போது பழைய பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் பெற அவர்களுக்கு உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியடைந்த தமிழக அரசின் நிதித்துறை, அவசரமாக சி.பி.எஸ்., திட்ட ஆசிரியர்கள் அவர்களின் சி.பி.எஸ்., தொகையை பெற நிர்ப்பந்திக்கிறது. ஆசிரியர்களிடம் 'எதிர்காலத்தில் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை கோர மாட்டேன்' என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றார்.