குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 3ம் தேதி துவக்கம்

UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:30 AM
உடுமலை :
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜன., 3ம் தேதி துவங்குகிறது.
மாநில அரசு பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், அட்டவணை கடந்த நவ., மாதம் வெளியிடப்பட்டது.
அதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கான குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு 2025 பிப்., 24ம் தேதி வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன., 3ம்தேதி துவங்குகிறது.
பயிற்சியில், மாதம் இருமுறை மாதிரி தேர்வுகளும் நடக்கிறது. இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் பெயர்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது 0421 2999152, 9499055944 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம். இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.