கலெக்டர் அலுவலக நுாலகம் விரிவுப்படுத்தப்படுமா? இடநெருக்கடியால் அல்லல்

UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:32 AM
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகநுாலகத்திற்கு வாசகர்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில் இடநெருக்கடி பெரிய பிரச்னையாக உள்ளது. இதை விரிவுப்படுத்தப்படுத்தி அதிக இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுாலகம் அமைந்துள்ளது. மற்ற நுாலகங்களை காட்டிலும் துாய்மை பராமரிப்பும், புத்தகங்கள், இதழ்கள் அதிகம் இருப்பதால் கூரைக்குண்டு, சூலக்கரைமேடு போன்ற பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், முதியவர்கள் இந்த நுாலகத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் அருகே போட்டி தேர்வு பயிலும் மாணவர்களும் படித்து வருகின்றனர்.
அவர்களும் போட்டி தேர்வு தொடர்பான பொது அறிவு தகவலுக்கோ அல்லது வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள இங்குபடிக்க வருகின்றனர். ஒரே அறையில் இந்த நுாலகம் அமைந்துள்ளது. வழக்கமாக அமைக்கப்படும் கிளை நுாலகங்களின் அளவுக்கு தான் இந்த நுாலகமும் உள்ளது. ஆனால் தற்போது வாசகர்கள் வரத்து அதிகரிப்பால் கலெக்டர் அலுவலக வளாக கிளை நுாலகம் நிரம்பி வழிகிறது. எப்போதும் மக்கள் வரத்து உள்ளது. இதனால் இடநெருக்கடியும் உள்ளது. இதனால் யாரும் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்க முடிவதில்லை.
எனவே இந்த வளாகத்தை விரிவாக்கம் செய்து நுாலகத்தின் தரத்தை உயர்த்தினால் நிறைய மக்கள், ஓய்வு பெற்றோர், மாணவர்கள் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு விரைவில் இடமாற்றம் ஆக உள்ள நிலையில் இதற்கும் தீர்வு கண்டு விரிவாக்கம் செய்ய நுாலகத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும்.