தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியில் மாற்றம்; தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்

UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:35 AM

பொள்ளாச்சி :
ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, ரிவைஸ்டு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு என்ற பெயரில், 13ம் தேதி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்கிறது. அவ்வகையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை 1 முதல் 4 வரையான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி பள்ளி ஆசிரியர்கள், தொகுதி வாரியாக நடந்த முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.
அதேநேரம், வரும், 7, 16ம் தேதி, அவரவர் பணிக்காக, ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், இரண்டு மற்றும் 3ம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும். தொடர்ந்து, 18ம் தேதி, பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்று, அவரவர் பணிபுரிய உள்ள ஓட்டுச் சாவடியில் பயிற்சி அளிக்கப்படும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 16ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, 'ரிவைஸ்டு' இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு என்ற பெயரில், 13ம் தேதி நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
வரும், 16ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டால், ஒரு நாள் இடைவெளிக்கு பின் பணி ஒதுக்கீடு உத்தரவு பெறுதல், ஓட்டுச்சாவடியை தயார்படுத்துதல் உள்ள பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
லோக்சபா தொகுதி மாறி, ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால், பாதிப்பு அடைவர். அதனை தவிர்க்கு வகையில், தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, 13ல், ரிவைஸ்டு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.