விடுமுறையில் ஸ்மார்ட் கிளாஸ் பணிகள்; விரைந்து செயல்படுத்த அறிவுரை

UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:37 AM

உடுமலை:
அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு, கட்டமைப்பு வசதிகளை தயார்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு துவக்கப்பள்ளிகளில் வரும் புதிய கல்வியாண்டு, 2024 - 25 முதல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக, அனைத்து அரசு துவக்கப்பள்ளிகளிலும் இணையதள வசதி பெறுவதற்கு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தகட்டமாக, ஸ்மார்ட் வகுப்பறைக்கென ஒரு தனி அறை, பள்ளியில் ஒதுக்குவதற்கும், தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டு துவங்கும்போது, ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் இருக்க வேண்டுமென கல்வித்துறை எதிர்பார்க்கிறது. இதனால் இணையதள இணைப்பு, கட்டமைப்பு வசதிகளை விரைவில் முடிப்பதற்கு திட்டமிடுகிறது.
ஆனால், அரசுப்பள்ளிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், ஸ்மார்ட் வகுப்பறைக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில், சிக்கல் ஏற்படுகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதற்கு அடிப்படையான இணைய இணைப்பு பெறுவது முதல் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.இணைய இணைப்பு வழங்குவதற்கு அழைத்தாலும், முறையான பதில் கிடைப்பதில்லை. இணைப்பு வழங்குவதாக கூறிய பள்ளிகளிலும் பல நாட்களாகியும், செயல்படுத்தப்பட வில்லை.
ஆனால், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையத்தளத்தில் இணையதள இணைப்பு குறித்து பதிவிட தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டிருக்கின்றனர். அடுத்தது, எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்திய பின், மாணவர்களுக்கு பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவையாக உள்ளது.
தற்போது ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு இருக்கும், வகுப்பறை மாற்றம் செய்ய சொல்வதில் அதிருப்திதான் உண்டாகிறது. மேலும், கூடுதலாக அறை இருந்தாலும், அதை ஸ்மார்ட் அறையாக மாற்றுவதற்கான பணிகளுக்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு கூறினர்.