UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 08:48 AM
மதுரை:
மதுரைதிருமலை நாயக்கர் மகாலில் அரசின்சுற்றுலாத் துறை சார்பில்சித்திரைச் சுற்றுலா கலைவிழா ஏப். 21 முதல் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தினமும் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை பரதநாட்டியம், கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தோற்பாவை கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கரக ஒயிலாட்ட கலைக்குழுவின் ஒயிலாட்டம், மதிச்சியம் தங்கச்செல்வம் குழுவின் நையாண்டி மேளம், பாலா குழுவின் கரகாட்டம், பிருந்தா குழுவின் வீணை கச்சேரி, மதுரை ராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக்கல்லுாரி, மாஸ்டர் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம், திண்டுக்கல் நாகராஜன் குழுவின் மல்லர் கம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்றுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.