ஐந்தறிவு ஜீவன்களுக்கும்... தாகமெடுக்கும்!

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 08:51 AM

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் 24 சதவீதம் தான் தண்ணீர் இருப்பதாக, தமிழக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
கோவை நகரிலும் பெரும்பாலான குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வற்றி வறண்டு விட்டன. நம்முடைய வீடுகளுக்கு மாதமிரு முறையாவது குடிநீர் வருகிறது. போர்வெல் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து குடிக்கிறோம்; இரண்டும் இல்லையேல் கேன் வாட்டர் வாங்கிக் கொள்கிறோம்.
காடுகளில் உள்ள யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களுக்கும் கூட, வனத்துறையால் தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டு, அவ்வப்போது தண்ணீர் நிரப்பப்படுகிறது.
ஆனால் நகருக்குள் மேயவிடப்படும் ஆடு, மாடுகள், தெரு நாய்கள், இன்னும் காகம், குருவி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் பறவைகளுக்கு, தாகம் தணிப்பதற்கு எங்குமே தண்ணீர் இல்லாத நிலையே காணப்படுகிறது.
அதனால், இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீர் வைப்பது, அவற்றின் தாகத்தைத் தணிப்பதற்கு பேருதவியாக இருக்கும். பறவைகளுக்கு அகன்ற மண் சட்டிகளில், மொட்டை மாடிகளில் தண்ணீர் வைக்கலாம்.
ஆடு, மாடுகளுக்கு வாசல்களில் அண்டா அல்லது பெரிய வாளிகளிலும், தெரு நாய்களுக்கு சின்ன வாளிகளிலும் தண்ணீர் வைத்தால், அவை குடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். சில சூழல் அமைப்புகள், பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதற்கான மண் பாத்திரங்களை இலவசமாக வழங்கி வருகின்றன. இவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
பறவைகள், ஆடு, மாடுகளுக்கு, நம்முடைய அன்றாடப் பயன்பாட்டுக்குரிய தண்ணீரையே உபயோகிக்கலாம். அதேபோல, இந்த கோடையில் செடி, கொடிகளும் காய்ந்து விடும் என்பதால், காய்கறிக் கழிவுகளையும், உண்ணக் கொடுக்கலாம்.