வகுப்புக்கு வருகிறார்களா மாணவர்கள்? இனி, பெற்றோருக்கே குறுஞ்செய்தி

UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 11:47 AM

திருப்பூர்:
கடந்த வாரம் பெற்றோர் பயன்படுத்தி வரும், மாணவர்களுக்கென பதிவு செய்த மொபைல் போன் எண்களை சரிபார்க்க துவங்கிய கல்வித்துறை, ஒவ்வொரு வகுப்புக்கென தனி வாட்ஸ் அப் குழுவை உருவாக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி மாணவர் பள்ளிக்கு வரவில்லையெனில், உடனடியாக பெற்றோருக்கு மெசேஜ் சென்று சேரும்.
கல்வியாண்டு துவங்க போவதை முன்னிட்டு, பள்ளிகளில் மாணவர், பெற்றோர் பதிவு செய்துள்ள மொபைல் போன் மற்றும் தொடர்பு எண்களை சரிபார்க்கும் பணி கடந்த பத்து நாட்களாக நடந்து வந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதை சரிபார்க்கவும், அரசின் அறிவிப்புகள் முழுமையாக சென்று சேரவும் எண்கள் சரிபார்க்கப்படுவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஓ.டி.பி., கூற தயங்கிய பெற்றோர் பலர் கூட, பள்ளிகளுக்கு சென்று வகுப்பாசிரியர்களை சந்தித்து, தங்கள் மகன்/மகள் குறித்து விபரத்தை தெரிவித்து வந்தனர். பெரும்பாலான பள்ளி, வகுப்புகளில், 90 சதவீத மாணவ, மாணவியர் விபரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஜூன் முதல் வாரத்தில் பிரத்யேக வாட்ஸ்அப் குழு ஒவ்வொரு வகுப்புக்கும் செயல்பட உள்ளது.
இதுவரை பள்ளிக்கு, வகுப்புக்கு வந்த மாணவ, மாணவியர் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் தினசரி காலை அப்டேட் செய்தது போன்று, தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலு வலர், பெற்றோர்களுக்கும் விபரங்கள் அப்டேட் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் தங்கள் மகள்/மகள் பள்ளிக்கு வந்தாரா, வரவில்லையா என்ற விபரம் தினசரி பெற்றோருக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலமாக வந்து சேரும். தனியார் பள்ளிகள் பின்பற்றும் இந்நடைமுறையை சோதனை முறையில் அரசு பள்ளிகளிலும் துவங்கப்பட்டுள்ளது.
ஆப்சென்ட் விபரம் மட்டுமின்றி, தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண், பாடங்கள் கற்கும் விதம், எந்த பாடங்களில் பின் தங்கியுள்ளார், எத்தகைய பயிற்சியளிக்க வேண்டும், பெற்றோர் ஒத்துழைப்பு எந்த வகையில் தேவை என்பது குறித்தும் தனித்தனியே பெற்றோருக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல்கள் பகிரப்பட உள்ளது.
ஒன்று முதல் ஐந்து மற்றும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் அப்டேட் செய்வதில் பல்வேறு தாமதம், குளறுபடிகள் நேர்ந்தது. இதனால், பொதுத்தேர்வு எழுதும் தருவாயில் சில மாணவர் விபரம் விடுபட்டு போகிறது.
தேர்வு நேரத்திலும், தேர்வுக்கு பிறகும் அவரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் போகும் போது, மீண்டும் தேர்வெழுத செய்வது, உயர்கல்வியை தொடர்கிறதா என்பதை கண்காணிப்பது என பணிகள் நீள்கிறது.
இதனை தவிர்க்க ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவ, மாணவியர் பெற்றோரின் தற்போதைய மொபைல் எண் விபரங்களை அப்டேட் செய்து, வாட்ஸ்அப் குழு உருவாக்கும் முயற்சி, நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்கின்றனர், கல்வி அதிகாரிகள்.