UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 11:53 AM

அதிக எண்ணிக்கையிலான செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதால், இந்தியாவில் செவிலியர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும், இது நாட்டின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெரிய இடைவெளியை உருவாக்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1,000 பேருக்கு மூன்று செவிலியர்கள் என்ற விகிதத்தை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியாவில் 1.93 செவிலியர்கள் என்ற விகிதமே உள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 33 லட்சம் செவிலியர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செவிலியர்களுக்கான தேவை அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.