Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ இதழியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

மருத்துவ இதழியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

மருத்துவ இதழியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

மருத்துவ இதழியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

UPDATED : மே 21, 2024 12:00 AMADDED : மே 21, 2024 09:59 AM


Google News
Latest Tamil News
சென்னை :
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், மருத்துவ இதழியல் பட்டய படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ பல்கலை வெளியிட்ட செய்தி குறிப்பு:

முதுநிலை மருத்துவ இதழியல் பட்டய படிப்பானது ஓராண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம், எட்டு இடங்கள் உள்ள இப்படிப்பில் சேர, இளநிலை பட்ட படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம். இதழியல் துறையில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

இவற்றில், சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விபரங்கள், மருத்துவம் சார்ந்த சட்டங்கள், மருத்துவ குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படிப்புக்கு ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, www.tnmgrmu.ac.in என்ற இணையதளம், epidtnmgrmu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 2220 0713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us