அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

UPDATED : மார் 25, 2025 12:00 AM
ADDED : மார் 25, 2025 09:04 AM
புதுச்சேரி:
மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு அடுத்தப்படியாக இருக்கும் தொழில்முறை படிப்புகளில் சேர உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது:
மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு அடுத்தப்படியாக பி.எஸ்சி., நர்சிங், பி.எஸ்சி., விவசாயம், பி.பி.டி., எம்.எல்.டி., கால்நடை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பாட பிரிவுகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சென்டாக் மூலம் சேர்க்கை நடப்பது அறிந்ததே.
இந்நிலையில் 2024- 2025 கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., யில் பொதுத் தேர்வு எழுதி உள்ளனர். இத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் எட்டாக்கனியாகும் நிலை ஏற்படும். எனவே அரசு பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வியை போல் வரும் 2025-26ம் கல்வி ஆண்டு முதல் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளிலும் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதுகுறித்து முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரும் கலந்து ஆலோசித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தால் மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 37 இடங்களில் கடந்தாண்டு 20 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.
எனவே, இதில் மேலும் ஒரு சலுகையாக தமிழகத்தை போல் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற முறையை கொண்டு வர வேண்டும்.
முதல் முறையில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தால், இரண்டாவது நிபந்தனையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.