Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!

சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!

சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!

சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!

UPDATED : பிப் 12, 2025 12:00 AMADDED : பிப் 12, 2025 11:45 AM


Google News
புதுடில்லி:
மயோ கிளினிக்குடன் இணைந்து அதானி ஹெல்த் சிட்டியைத் தொடங்குவதில் பெருமைப்படுகிறேன் என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மயோ கிளினிக் மினசோட்டாவின் ரோசெஸ்டர் ; ஸ்காட்ஸ்டேல் மற்றும் பீனிக்ஸ், அரிசோனா ; மற்றும் ஜாக்சன்வில்லே, புளோரிடா ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற மருத்துவ அமைப்பாகும்.

அதானி குழுமம், மயோ கிளினிக்குடன் இணைந்து மும்பை மற்றும் அகமதாபாத்தில் இரண்டு 1,000 படுக்கைகள் கொண்ட மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ.6,000 கோடியை ஒதுக்கி உள்ளது.

இது, அதானி கடந்த வாரம் தனது இளைய மகன் ஜீத்தின் திருமணத்தின் போது உறுதியளித்த ரூ.10,000 கோடியின் ஒரு பகுதியாகும்.

இது குறித்து கவுதம் அதானி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி, குறைந்த செலவில் சுகாதாரம் மற்றும் மருத்துவக்கல்விக்கு முன்னோடியாக விளங்கும் மயோ கிளினிக்குடன் இணைந்து அதானி ஹெல்த் சிட்டியைத் தொடங்குவதில் பெருமைப்படுகிறேன்.

அகமதாபாத் மற்றும் மும்பையில் இரண்டு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுடன் தொடங்கி, இந்தியா முழுவதும் அதிநவீன மருத்துவ கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இது ஆரோக்கியமான, வலுவான இந்தியாவிற்கான ஆரம்பம் மட்டுமே.இந்தியாவில் சுகாதாரத் தரத்தை உயர்த்த உதவும், சிக்கலான நோய் பராமரிப்பு மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு கவுதம் அதானி அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us