மாற்றுத்திறனாளிகள் வருவாய்க்கு திட்டம்: பட்ஸ் பள்ளியில் நுால் நுாற்பு

UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:47 AM
பாலக்காடு:
பாலக்காடு, கண்ணாடியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் படிக்கும், பட்ஸ் என்ற பள்ளியில், இயந்திரம் வாயிலாக நுால் நுாற்பு செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் கல்வி மறுவாழ்விற்காக, கேரள அரசு அறிமுகம் செய்த திட்டம் பட்ஸ் பள்ளி. பெண்களின் அமைப்பான 'குடும்பஸ்ரீ'யின் மேற்பார்வையில், ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, இந்த பள்ளிகள் செயல்படுகின்றன.
பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் இத்தகைய 15 பள்ளிகள் செயல்படுகின்றன. அதில் ஒன்று பாலக்காடு நகரை ஒட்டியுள்ள கண்ணாடி என்ற பகுதியில் உள்ளது. இங்குள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட, 10 மாற்றுத்திறனாளிகள் உடல் மற்றும் மனச்சவால்களை சமாளித்து, நூல் நுாற்பு செய்து, வருவாய் ஈட்டி சொந்தக் காலில் வாழ்கின்றனர். மாவட்ட ஊராட்சியும், காதி வாரியமும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ளன.
இவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது, ஐந்து கொண்டை நூல்களை நுாற்கின்றனர். இதன் வாயிலாக, தினமும், 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். பணம் சம்பாதிப்பதைத் தவிர, இது ஒரு நல்ல உடற்பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாவட்ட ஊராட்சி தலைவர் பினு மோள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை துவங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக மாவட்ட ஊராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காதி வாரியத்திற்காக இங்கு நூல் நூற்கப்படுகிறது.
இவர்கள் குறைந்தது, 100 நாட்கள் வேலை செய்தால், காதி வாரியத்தின் நல நிதித் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். மாநில வேலைவாய்ப்பு காப்பீட்டின் கீழ், மருத்துவ உதவி மற்றும் வீடு கட்டுவதற்கான உதவி போன்ற சலுகைகளும் இவர்களுக்கு கிடைக்கும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள மற்ற பட்ஸ் பள்ளிகளுக்கும், நுால் நுாற்பு செய்யும் இயந்திரத்தை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.