நீதிபதியாக நடித்து கைதியை பிடிக்க உதவிய பேராசிரியர்

UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:44 AM
தார்வாட்:
சில சந்தர்ப்பங்களில், போலீசாரும் கூட திரைப்பட இயக்குநராக மாற வேண்டி அவசியம் ஏற்படும். இத்தகைய சம்பவம் தார்வாடில் நடந்தது.
தார்வாடின் குமாரேஸ்வர லே - அவுட்டில் வசிப்பவர் விஜய் உனகல், 30. இவர், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கினார். இவர் மீது கடந்த 2021ல், போக்கோ வழக்கு பதிவானது. இவரை தார்வாட் போலீசார் தேடி வந்தனர். அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது.
போலீசாரும் அவரை கண்டுபிடித்து, காலையில் கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிறைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். எப்படியோ போலீசாரிடம் இருந்து தப்பிய விஜய் உனகல், உயரமான கட்டடம் ஒன்றின் மீது ஏறி கொண்டார். நீதிபதி, அங்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.
கட்டடம் முன், மக்கள் குவிந்தனர். அப்போது கர்நாடக பல்கலைக் கழக பேராசிரியர் விஸ்வநாத் சிந்தாமணி அங்கு வந்தார். அவரிடம், கைதியை பிடிக்க போலீசார் உதவி கேட்டனர். பேராசிரியரும் சம்மதித்தார். அவருக்கு கறுப்பு கோட் அணிவித்து, நீதிபதி வேடம் போட்டு போலீசார் அழைத்து வந்தனர். அவரை, விஜய் உனகல்லிடம் பேச வைத்தனர்.
பேராசிரியரும் நீதிபதி போன்று நடித்து, விஜய் உனகல்லிடம் நைசாக பேசி, கட்டடத்தில் இருந்து இறங்க வைத்தார். அப்போது பின்புறமாக வந்த போலீசார், அவரை பிடித்து தார்வாட் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.