3 ஆண்டுகளாக செயல்படாத பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 09:10 AM

சென்னை:
அசோக் நகர், மேற்கு மாம்பலம், வாசுதேவபுரத்தில் பால வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளி கட்டடம் உள்ளது.
இந்த பள்ளி, கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ளது. இதையடுத்து, அங்கு காவலாளி ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், இப்பள்ளி கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, மர்ம நபர் ஒருவர் பேசி, இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், அங்கிருந்து வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து, மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.