Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த 57 திட்டம்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த 57 திட்டம்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த 57 திட்டம்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த 57 திட்டம்

UPDATED : ஏப் 03, 2024 12:00 AMADDED : ஏப் 03, 2024 11:54 AM


Google News
திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்தி, மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், 57 திட்டங்கள் வரை நடைமுறையில் உள்ள நிலையில், அத்திட்டங்கள் எந்தளவு பலன் கொடுத்திருக்கிறது என்பதை, கல்வித்துறை கண்காணிக்க உள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்த்தவும், கல்வித்தரம் மேம்படுத்தவும், அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கேற்ப, நகர, கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்த்திருக்கிறது. இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத்திருவிழா, கோடைக் கொண்டாட்டம்.
சிறார் திரைப்பட விழா, நம் பள்ளி நம் பெருமை, நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், முதல்வரின் காலை உணவுத்திட்டம், தமிழ் மொழி திறனறிவு தேர்வு, மணற்கேணி, தமிழ்க்கூடல், முதல்வர் திறனறிவு தேர்வு, பள்ளி மேம்பாட்டு திட்டம், சிற்பி திட்டம், தலைமைத்துவ விருது உட்பட, 57 திட்டங்கள் இதுவரை நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு திட்டத்திலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரை முழு அளவில் ஈடுபடுத்தி, அரசுப்பள்ளிகளின் பெருமையை பிரபலப்படுத்தவும், அதன் வாயிலாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முனைப்புக் காட்டப்படுகிறது. அதன் பலன் எந்தளவு இருக்கிறது என்பதை கல்வித்துறை கண்காணிக்க உள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இது, நல்ல பலனை தருகிறது. ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மட்டும் சற்று தொய்வு தென்படுகிறது.
சமீபத்திய, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில், ஆரம்பக்கல்வி துவங்கி, மேல்நிலைப்பள்ளி வரை, 2.16 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம், விளையாட்டு நன்றாக இருக்கிறது; ஆனால், கட்டமைப்பு தான், கவலையளிக்கும் வகையில் இருக்கிறது என்ற ஆதங்கத்தை பெற்றோரிடம் பார்க்க முடிகிறது. கல்விக்குழு கூட்டங்களில் பல பெற்றோர், இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
எனவே, பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி போன்றவை தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருந்தால், நிச்சயம் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். அதேநேரம், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பதும் அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us