குழந்தை கடத்தல் வதந்தி பெற்றோருக்கு அறிவுரை

UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 11:56 AM
சென்னை:
குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் குறித்து, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் திரியும் குழந்தைகள் மற்றும் வீட்டுக்கு முன் தெருவில் விளையாடும் குழந்தைகளை, வடநாட்டவர்கள் சிலர் கடத்திச் செல்வதாக வதந்திகள் பரவுகின்றன. இதனால், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில், ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இதுபோன்ற வதந்திகளால், சில இடங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதைத்தடுக்க, குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, வதந்திகள் குறித்து பெற்றோருக்கு தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலி வீடியோக்கள், படங்கள், சமூக வலைதள பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும், அதன் உண்மைத்தன்மை தெரியாமல் பீதியடைய வேண்டாம் என்றும், பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என, இயக்குனரகம் தெரிவித்துள்ளது.