Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

UPDATED : ஜன 21, 2025 12:00 AMADDED : ஜன 21, 2025 09:08 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் விலக்கில் சுற்றுலா வேன் மீது பள்ளி பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் அருகே புத்தேந்தலைச் சேர்ந்தவர் இளங்கோவன் 48. இவர் தனது உறவினர்களுடன் வேனில், சிவகங்கை மாவட்டம், உருவாட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்றனர்.

அப்போது திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை இருதயபுரம் விலக்கு அருகே காலை 9:15 மணிக்கு வேன் சென்ற போது, மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆர்.எஸ்.மங்கலம் வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் பஸ், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருதயபுரம் வழியாக பள்ளி செல்வதற்கு திரும்பிய போது, எதிரே வந்த வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுற்றுலா வாகனத்தில் சென்ற தாதனேந்தல் இளையராஜா 40, குழந்தை ரஷநாயகி 5, தினேஷ் குமார் 30, ஆகியோர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வாகனத்தில் பயணம் செய்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.

இளங்கோவன் புகாரில், பள்ளி வாகன டிரைவர் அத்தானுாரை சேர்ந்த வன்மீக நாதன் 50, மீது ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிவு செய்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us