அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் ஊக்குவிக்க வலியுறுத்தல்

UPDATED : ஜன 21, 2025 12:00 AM
ADDED : ஜன 21, 2025 09:10 AM
உடுமலை :
அரசுப்பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் செயல்பாடுகளை ஊக்குவிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலைப்பயிர் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, தோட்டக்கலை மன்றம் என்ற திட்டத்தை கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.
தோட்டக்கலை பயிர் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு முறைகள், காய்கறி நாற்றங்கால் அமைத்தல், காய்கறிகளின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள், அலங்கார செடிகள் வளர்ப்பு முறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, தோட்டக்கலை மன்றம் அமைக்க, அத்துறை அலுவலர்கள் வாயிலாக பல்வேறு ஆலோசனை பெறவும் அறிவிக்கப்பட்டது.
ஒரு பள்ளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதிஒதுக்கீடு செய்து, அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத்துறையின் உதவியுடன் திட்டத்தை செயல்படுத்த, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதன் பின் பள்ளிகளில் இத்திட்டம் பின்பற்றப்படவில்லை.
சில பள்ளிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே காய்கறி செடிகள், மூலிகை செடிகள் மற்றும் பழவகை மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
உடுமலை சுற்றுச்சூழல் சூழல் சங்கத்தினர் கூறியதாவது:
பள்ளிகளில் இயற்கை வேளாண் குறித்து மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் தோட்டம் அமைக்கப்படுகிறது. ஆனால் தற்போது பெரும்பான்மையான பள்ளிகளில், மாணவர்களின் தோட்டம் என்பதே இல்லை.
ஏற்கனவே பராமரிக்கப்பட்ட பள்ளிகளிலும், தற்போது காணாமல் போய்விட்டது. பல்வேறு இணை செயல்பாடுகளுக்கு கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு வேளாண் சார்ந்த தோட்டம் அமைக்கும் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில், கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.