ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 மாணவர்கள் சஸ்பெண்ட்

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:01 AM
திருவேற்காடு:
திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் சவீதா பல்கலைக்கழகத்தின் கல்லுாரி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் எம்.பி.ஏ., படிக்கின்றனர். கல்லுாரி கட்டண பிரச்னை தொடர்பாக, நேற்று முன்தினம் காலை, நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவேற்காடு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேரை கல்லுாரி நிர்வாகம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவான இரண்டு ஊழியர் மீது கல்லுாரி நிர்வாகம் சார்பில், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.