சி.இ.ஓ., அலுவலகத்தை சுத்தப்படுத்துங்க!
சி.இ.ஓ., அலுவலகத்தை சுத்தப்படுத்துங்க!
சி.இ.ஓ., அலுவலகத்தை சுத்தப்படுத்துங்க!
UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:10 AM

திருப்பூர்:
புதிய கல்வியாண்டுக்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், முதன்மை கல்வி அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, பள்ளி இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில், 2024 - 2025ம் கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறையின் அறிவுரையை ஏற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முடிவுற்ற கோப்புகளை அழிக்க வேண்டும். கோர்ட்டு வழக்கு, முக்கிய அரசாணை, நியமனங்கள் என தொடர் நடவடிக்கை தேவைப்படும் கோப்புகளை மின்னணு முறையில் மாற்றி, நிரந்தர ஆவணமாக்கி, பராமரிப்பது வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு
பள்ளி கல்வித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் பதிவு அறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. முடிவுற்ற கோப்புகளை காலக்கெடுவுக்கு பிறகும் அழிக்காததால், அவை அதிக அளவில் தேங்கியுள்ளன. இதை சரிசெய்ய வேண்டும்.
பதிவு அறையில் உள்ள கோப்புகளின் காலக்கெடு முடிந்ததை ஆராய்ந்து காலம் தாழ்த்தாமல், அலுவலக பொறுப்பாளரின் அனுமதி பெற்று அவற்றை அழிக்க வேண்டும். குறிப்பிட்ட, காலக்கெடு நீட்டிக்கப்பட்ட கோப்புகள் தவிர்த்து, மற்ற கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என அலுவலக கண்காணிப்பாளர் சான்று தர வேண்டும். 'எமிஸ்' தளத்தில் இவ்விபரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே நேரம், கோர்ட்டு வழக்குகள், முக்கிய அரசாணைகள், நியமனங்கள் என தொடர் நடவடிக்கை தேவைப்படும் கோப்புகளை அழிக்காமல் முறையாக பாதுகாக்க வேண்டும். அவற்றை மின்னணு முறையில் மாற்றி, நிரந்தர ஆவணமாக்கி, பராமரிப்பது அவசியம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து, விரிவான அறிக்கை, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.