வேலையில்லா பட்டதாரிகளுக்கு 'யுவநிதி' திட்டம் துவக்கம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 'யுவநிதி' திட்டம் துவக்கம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 'யுவநிதி' திட்டம் துவக்கம்
ADDED : ஜன 12, 2024 11:25 PM

ஷிவமொகா: காங்கிரசின் ஐந்தாவது வாக்குறுதித் திட்டமான, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் 'யுவநிதி' திட்டம் ஷிவமொகாவில் நேற்று துவங்கப்பட்டது.
கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை காங்கிரஸ் அறிவித்தது. இதில், நான்கு திட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டன.
ஐந்தாவது திட்டமான வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3,000 ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் வழங்கும் 'யுவநிதி' திட்டம், ஷிவமொகாவில் முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கிவைத்தார்.
அப்போது, சில வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, பேசியதாவது:
வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வாக்குறுதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே நான்கு திட்டங்கள் நிறைவேற்றிய நிலையில், ஐந்தாவது திட்டமான 'யுவநிதி'யும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலை கிடைக்கும் வகையில், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வேலை கிடைக்காமல் துவண்டுவிடக் கூடாது என்பதால், 'யுவநிதி' திட்டம் உதவியாக இருக்கும்.
விவேகானந்தர் பிறந்த நாளன்றே திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதுவரை 70,000 பேர் பதிவு செய்துள்ளனர். எந்த மதம் பசித்தவர்களுக்கு உணவு போடவில்லையோ, அந்த மதம் மீது நம்பிக்கை இல்லை என்று விவேகானந்தர் கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.