மெட்ரோ ரயிலில் 'ரீல்ஸ்' வீடியோ யூ - டியூபருக்கு ரூ.500 அபராதம்
மெட்ரோ ரயிலில் 'ரீல்ஸ்' வீடியோ யூ - டியூபருக்கு ரூ.500 அபராதம்
மெட்ரோ ரயிலில் 'ரீல்ஸ்' வீடியோ யூ - டியூபருக்கு ரூ.500 அபராதம்
ADDED : ஜன 11, 2024 03:40 AM

பெங்களூரு: பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மெட்ரோ ரயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த, யு - டியூபரிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு கேட்டலஹள்ளியில் வசிப்பவர் சந்தோஷ்குமார், 25. யு - டியூபரான இவர், சமூக வலைதளங்களில் யஷ் கவுடா என்ற பெயரில், கணக்கு வைத்து உள்ளார். இந்த சமூக வலைதள கணக்கில், 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
கடந்த மாதம் 24ம் தேதி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சந்தோஷ்குமார், சக பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. உப்போர்பேட் போலீசில் புகார் செய்தனர். சந்தோஷ்குமாரை நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் வரவழைத்த போலீசார், அவரை எச்சரித்தனர்.
அங்கு இருந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள், சந்தோஷ்குமாரிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். 'இனி இதுபோன்று செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து அனுப்பினர்.