ADDED : மே 25, 2025 12:02 AM

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பெயர் சேர்க்கப்பட்டு இருப்பது மாநிலத்திற்கே அவமானம். அவர் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். அவரை விசாரிக்க கவர்னர் அனுமதி வழங்க வேண்டும்.
கே.டி.ராமாராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்டிர சமிதி
கைகோர்ப்போம்!
ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி வைக்க எங்கள் கட்சி விருப்பத்துடன் உள்ளது. மராத்தி மக்களின் நலனுக்காக மனப்பூர்வமாக இந்த நிலைப்பாட்டிற்கு உத்தவ் தாக்கரே வந்துள்ளார். கருத்து வேறுபாடுகளை மறந்து கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி
ராகுலின் பழக்கமாகிவிட்டது!
பயங்கரவாதிகள் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், நாட்டின் 140 கோடி மக்களும் ஒற்றுமையாக நிற்கின்றனர். ஆனால் ராகுல் இந்த சமயத்தில் கூட நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கவுரவத்தை கேள்விக்குஉள்ளாக்குகிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர், பா.ஜ.,