டில்லி கலவர வழக்கு கைதானவர்களுக்கு ஜாமின் கிடைக்குமா?
டில்லி கலவர வழக்கு கைதானவர்களுக்கு ஜாமின் கிடைக்குமா?
டில்லி கலவர வழக்கு கைதானவர்களுக்கு ஜாமின் கிடைக்குமா?
ADDED : செப் 12, 2025 02:26 AM
புதுடில்லி:கடந்த, 2020ல் டில்லியில் நடந்த கலவர வழக்கில், ஜாமின் மறுக்கப்பட்டவர்களின் மனுக்களை இன்று விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
கடந்த 2ம் தேதி, அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிசா பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அன்ஜரியா ஆகியோரை கொண்ட அமர்வு, இந்த ஒன்பது பேரின் கோரிக்கை மனுக்களை விசாரிக்க உள்ளது. ஜாமின் கோரியுள்ள ஒன்பது பேரும், கடந்த ஐந்தாண்டுகளாக சிறையில் உள்ளோம் என தெரிவித்து, ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.