Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புராண கிலாவில் படகு சேவைக்கு பின் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

புராண கிலாவில் படகு சேவைக்கு பின் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

புராண கிலாவில் படகு சேவைக்கு பின் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

புராண கிலாவில் படகு சேவைக்கு பின் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

ADDED : செப் 12, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:டில்லியின் பாரம்பரிய அரண்மனை கட்டடமான புராண கிலாவை சுற்றிப் பார்க்க, படகு சேவை துவக்கப்பட்டுள்ளதால், அந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

ஆப்கன் மன்னர் ெஷர் ஷா சூரி, 16ம் நுாற்றாண்டில் கட்டிய இந்த பழங்கால வரலாற்றை பேசும் அரண்மனைக்கு, நாள்தோறும் 100 - 200 சுற்றுலா பயணியரே வந்த வண்ணமாக இருந்தனர்.

சமீபத்தில் துவக்கப்பட்ட படகு சேவைக்கு பின், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை இப்போது, 500 - 600 ஆக அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில், 1500 - 2000 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அரண்மனையை சுற்றி படகு சேவை துவக்க உள்ள சப்யதா பவுன்டேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் வர்மா கூறும் போது, ''இப்போதைக்கு, 20 படகுகள் உள்ளன. அவற்றில் பத்து, நான்கு இருக்கைகள் கொண்டவை; 10 படகுகள் மூன்று இருக்கைகள் கொண்டவை.

''இதற்கான கட்டணமாக 20 நிமிட படகு பயணத்திற்கு, 125 - 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இந்த சேவை, காலை 8:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை இருக்கும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us