ஒக்கலிகர் கோட்டையில் காவி கொடி பறக்குமா?
ஒக்கலிகர் கோட்டையில் காவி கொடி பறக்குமா?
ஒக்கலிகர் கோட்டையில் காவி கொடி பறக்குமா?
முதல் வெற்றி
கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில், மாண்டியாவின் கே.ஆர்.பேட்டில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட, நாராயண கவுடா வெற்றி பெற்றார். ஆனால் 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தந்திரம் பலிக்குமா?
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், சுயேச்சை எம்.பி., சுமலதா, பா.ஜ.,வில் இணைந்து போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால், மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. மாண்டியாவை ம.ஜ.த., கேட்டு வருகிறது. ஆனால் சுமலதா விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
காத்திருக்கும் கொக்கு
மாண்டியாவில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், ஒக்கலிகர் ஓட்டுகள் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. குமாரசாமி ஒக்கலிகர் என்பதால், அந்த தொகுதியில் ம.ஜ.த., போட்டியிட்டால், வெற்றி எளிது என்று நினைக்கிறார்.
உன்னிப்பாக கவனிப்பு
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தின் மூலம், காங்கிரசை புறக்கணித்து, பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்றால், ஒக்கலிகர் கோட்டையில் பா.ஜ., கொடி பறக்கவும் வாய்ப்பு உண்டு. கெரேகோடு கிராமத்தில் நடந்து வரும் பிரச்னையை, பா.ஜ., மேலிட தலைவர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.