Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2026ல் சென்னைக்காக விளையாடுவேனா? ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

2026ல் சென்னைக்காக விளையாடுவேனா? ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

2026ல் சென்னைக்காக விளையாடுவேனா? ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

2026ல் சென்னைக்காக விளையாடுவேனா? ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

UPDATED : மே 25, 2025 10:29 PMADDED : மே 25, 2025 08:43 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: அடுத்த ஆண்டு நடக்கும் பிரீமியா லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேனா? என்பது குறித்து குஜராத் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

பிரீமியர் லீக் வரலாற்றிலேயே சென்னை அணிக்கு இதுபோன்ற மோசமான ஒரு தொடர் அமைந்ததே இல்லை. மிகவும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் சென்னை அணி, நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, அதில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தோனி ஓய்வு குறித்து பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. குஜராத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்திற்கு பிறகும், தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, அவர் கூறியதாவது; இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இன்று தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை.

உடல் பிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் ஆட்டத்திறனை வைத்து ஓய்வு முடிவு எடுக்க விரும்பினால், சிலர் 22 வயதில் கூட ஓய்வு பெற வேண்டி இருக்கும். தற்போதைக்கு ராஞ்சிக்கு செல்கிறேன். பைக் ரைடு செய்ய உள்ளேன். திரும்பி வருவேன் என்றும் சொல்ல மாட்டேன். திரும்பி வர மாட்டேன் என்றும் இப்போது சொல்ல மாட்டேன். நன்கு யோசித்து முடிவு எடுப்பேன்.

போட்டிகளில் இன்னும் நாங்கள் ரன் குவிக்க வேண்டும். அதில் சில ஓட்டைகள் உள்ளன. அதனை நிரப்ப வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் சில விஷயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கேப்டனாக செயல்பட பொருத்தமானவர். அவர் என்னை விட 25 வயது இளையவர். அதைப் பார்க்கும் போதுதான் நான் வயதானதை உணர்கிறேன், எனக் கூறினார்.

இதன்மூலம், தற்போதைக்கு அவர் ஓய்வை முடிவை எடுக்கவில்லை என்றே தெரிகிறது.

தனக்குப் பிறகு இளம் வீரர்கள் தலைமையேற்று சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்று தான் கேப்டன் பொறுப்பை கெயிக்வாட்டிடம் கொடுத்தார் தோனி. ஆனால், நடப்பு சீசனில் சென்னை அணிக்கு எதிர்பார்த்ததை போல அமையவில்லை. இதற்கு அணி முழுமையாக கட்டமைக்கப்படாததே காரணம் என்று கூறப்பட்டது. எனவே, தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us