இனி ஏதும் தவறு நடந்தால் அழிவு உறுதி: பாக்.,கை எச்சரித்த ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்
இனி ஏதும் தவறு நடந்தால் அழிவு உறுதி: பாக்.,கை எச்சரித்த ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்
இனி ஏதும் தவறு நடந்தால் அழிவு உறுதி: பாக்.,கை எச்சரித்த ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்
ADDED : மே 25, 2025 08:40 PM

ஜம்மு:எதிர்காலத்தில் ஏதேனும் தவறு நடந்தால் அழிவு உறுதி என்று பாகிஸ்தானுக்கு, ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா எச்சரித்துள்ளார்.
ஜம்மு -காஷ்மீரில் உள்ள ஜாட் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள ஜாட் சபா நிகழ்வில் மனோஜ் சின்ஹா பேசியதாவது:
எதிர்காலத்தில் பாகிஸ்தான் ஏதும் தவறு செய்தால், இந்திய ஆயுதப்படைகள், பயங்கரவாத அரசை அழிப்பதை உறுதி செய்யும்.
பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் இருக்காது. அவர்களின் செயல்களுக்கு ஆபரேஷன் சிந்துார் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்திலிருந்து முற்றிலுமாக அகற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.