ஹிந்து நாடானால் வளர்ச்சி அடையுமா? முதல்வர் மகன் எதீந்திரா சந்தேகம்
ஹிந்து நாடானால் வளர்ச்சி அடையுமா? முதல்வர் மகன் எதீந்திரா சந்தேகம்
ஹிந்து நாடானால் வளர்ச்சி அடையுமா? முதல்வர் மகன் எதீந்திரா சந்தேகம்
ADDED : ஜன 05, 2024 04:54 AM
தாவணகெரே : ''மதத்தின் பின்னால் சென்றால், நாடு வளர்ச்சி அடையாது. நம் நாட்டை ஹிந்து நாடாக்க முற்பட்டுள்ளனர். மதத்தின் பின்னால் சென்றால், இந்தியாவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை போன்று திவாலாகும்,'' என, முதல்வர் சித்தராமையா மகனும், காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எதீந்திரா தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
இந்தியாவை ஹிந்து நாடாக்க வாய்ப்பளிக்காதீர்கள். ஒரு வேளை வாய்ப்பளித்தால், இந்தியாவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்று திவாலாகும். இந்தியா ஹிந்து நாடானால், வளர்ச்சி அடையாது. மதத்தின் பின்னால் சென்ற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் நிலை என்னவானது என்பது தெரியும். அது போன்று நம் நாட்டுக்கும் அபாயம் ஏற்படும். எச்சரிக்கையாக இருங்கள்.
இன்று மதச்சார்பற்ற தத்துவத்துக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை ஹிந்து நாடாக்க, பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் முயற்சிக்கின்றன. இதற்கு வாய்ப்பு அளிக்காதீர்கள். மதத்தை காண்பித்து உண்மையான பிரச்னைகளை மறைக்கின்றனர்.
இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக, சித்தராமையாவுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். அவர் பின் தங்கியோர், தலித்துகளுக்காக பணியாற்றுகிறார். முழுமையாக பணியாற்ற உங்களின் ஆசி வேண்டும். அவர் ஐந்து ஆண்டு முதல்வராக நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.